தனது மகன் நடிகராவதை விரும்பாத பிரபல பாடகர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

நான் நடிகராக மாறியதை அப்பா விரும்பவில்லை என பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏராளமான பாடல்களை பாடி புகழ்பெற்றவர் பின்னணி பாடகர் யேசுதாஸ். இவரின் மகன் விஜய் யேசுதாஸும் பின்னணி பாடகராக, திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பின்னர், ’மாரி’ படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில், விஜய் யேசுதாஸ் வில்லன் வேடம் ஏற்றிருந்தார்.

தற்போது, ‘படைவீரன்’ எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் விஜய் யேசுதாஸ் கூறுகையில், ‘படைவீரன் படத்தில் மதுரை வட்டார வழக்கு மொழி பயிற்சி எடுத்து நடித்தேன்.

எனக்கு சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், அப்பாவுக்கு அவரைப்போல் நானும் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசை.

அதனால் தான் பாடகரானேன். மாரி படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்ததால் நடிகனாக மாறினேன். நான் நடிகன் ஆனது அப்பாவுக்கு பிடிக்கவில்லை.

ஏனெனில், நடித்தால் குரல் வளம் கெட்டு, இசைஞானம் போய்விடும் என்று அவர் அஞ்சுகிறார். ஆனால், இன்றைக்கு பாடகர்கள் நடிக்க வருவதும், இயக்குனராவதும் நடக்கிறது.

நான் வில்லனாக நடித்தேன் என்பதற்காகவே, அப்பா ‘மாரி’ படத்தை பார்க்கவில்லை. மேலும், நான் நடிப்பது என் மகள் உள்பட என் குடும்பத்தில் பலருக்கு பிடிக்கவில்லைதான்.

ஆனால், ஒரு வெற்றி அவர்கள் எல்லோருடைய மனதையும் மாற்றும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்