என் மூச்சு முட்டிக்கிடக்கிறது: வைரமுத்து உருக்கம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
109Shares
109Shares
lankasrimarket.com

ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து மீதான வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவர் உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.

என் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது, கடந்த 10 நாட்களாக என் மூச்சு முட்டிக்கிடக்கிறது,

ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? என்று வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தமது கட்டுரையை அரங்கேற்றியது தவறா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழுக்கு தடம் பதித்தவர்களை அறிமுகப்படுத்த ஆசைப்பட்டேன். ஆண்டாளின் கவிதையில் அழகியல் கொட்டிக்கிடக்கிறது.

தமிழ் வெளியில் தாம் கேட்ட முதல் பெண் குரல் ஆண்டாளின் குரல் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.

ஆண்டாளின் பாசுரங்கங்களை பாட பாட பக்தி இல்லாத தனக்கு சக்தி பிறக்கிறது, தமிழ் பிறக்கிறது, அந்த ஓசையில் உணர்ச்சி இருக்கிறது என்றும் மேலும் அந்த கவிதையில் ஒரு கவர்ச்சி மற்றும் அழகியல் கொட்டிக்கிடக்கிறது என்றார்.

தாம் ஆண்டாளை சமூகவியல் பார்வையில் பார்த்தகாவும் தேவதாசி என்பது உயர்ந்தகுல பெண்களுக்கு வழங்கப்பட்ட பெயர் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆணாதிக்க சமுதாயத்தில் முதல் பெண் குரல் ஆண்டாளில் குரல் என்றும் அவர் கூறியுள்ளார்.

நான் பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டி விளக்கி கூறினேன். ஆண்டாளை பல்வகையிலும் புகழ்ந்து பாராட்டி பேசினேன். அப்போது ஆண்டாளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் உள்ள விஷயங்களைப் பற்றியும் கூறினேன். ஆண்டாள் தேவதாசியாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து அங்கு இறந்ததாக அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாக கூறினேன்.

கடவுளாகவும், கடவுளுக்கு சேவை செய்தவராகவும் கூறப்படும் ஆண்டாளை பற்றி இப்படி அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று மேற்கோள்காட்டி சொன்னேன். ஆராய்ச்சி கட்டுரையில் கூறப்பட்டுள்ள அந்த வார்த்தை தற்போது தவறான அர்த்தத்தில் மாறி இருக்கிறது.

அதில் தாசி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்பது வேறு. ஆனால் இடையில் தாசியை வேசி என்பதுபோல வேறு அர்த்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள். நான் இதுபற்றி விரிவாக சொன்னபோதும், அதை புரிந்து கொள்ளவில்லை.

நான் ஆண்டாளை குறைத்து மதிப்பிட்டோ அல்லது சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ அந்த மேற்கோளை பயன்படுத்தவில்லை. ஆண்டாள் எனக்கு பாலூட்டி வளர்த்த தாய் போன்றவர். ஆண்டாள் தனது தமிழை எனக்கு ஊட்டி என்னை இந்த அளவுக்கு வளர்த்துள்ளார்.

அப்படி இருக்க நான் எனது தாயை சிறுமைப்படுத்துவேனா? என்றும் அது ஒரு ஆராய்ச்சி கட்டுரை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எல்லோராலும் அதை புரிந்து கொள்ள முடியாது. இப்படி நான் சொல்வதால் மீண்டும் அவர்கள் என்னை தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படலாம்.

மேலும் அரசியல் கலந்த மதத்திற்காகவோ அல்லது மதம் கலந்த அரசியலுக்ககவோ தன்னுடைய கருத்து தவறாக திரிக்கப்பட்டு விட்டது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்