நடிகர் சூர்யாவை கிண்டலடித்த பிரபல தொகுப்பாளினிகள்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

நடிகர் சூர்யாவின் உயரத்தை இரண்டு தொகுப்பாளினிகள் சேர்ந்து கிண்டல் செய்ததற்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார், இதில் அவருக்கு அப்பாவாக நடிகர் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.

இதனை பற்றி பிரபல மியூசிக் சேனல் ஒன்றில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இரண்டு தொகுப்பாளிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்து பேசியிருந்தனர்.

அதாவது, சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்காக ஹீல்ஸ் போட்டார் சூர்யா, அமிதாப் பச்சனுடன் நடித்தால் அவர் ஸ்டூல் போட்டு தான் நடிக்க வேண்டும் என கிண்டல் செய்தார்கள்.

இதற்கு திரையுலகை சேர்ந்த விஷால், கருணாகரன், விக்னேஷ்சிவன், கவுரவ் நாராயணன் போன்றோர் கடும் கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

ரசிகர்களும் தொகுப்பாளிகளின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்