பிரபல டிவி சீரியல் நடிகை புற்றுநோயால் மரணம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
876Shares
876Shares
lankasrimarket.com

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை ரீட்டா கொய்ரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

பெங்காலி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ரீட்டா கொய்ரல்(58). இவர் சீரியல்களில் பெரும்பாலும் வில்லியாகவே நடித்து வந்துள்ளார்.

அபர்னா சென், ரித்துபர்னோ கோஷ், அஞ்சன் தத்தா உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ள இவர், போரோ போ, குண்டா, ஜிபன் நியே கேலா, சிரோதினி துமி ஜே அமர் உள்ளிட்ட பல ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ரீட்டாவுக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதனால் தனியார் மருத்துவமனையில் கடந்த 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்த ரீட்டா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதை அறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்