தாத்தாக்கள் ஹீரோவாக இருக்கும் போது.. கஸ்தூரி ஆவேசம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகையான கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், தாத்தாக்கள் எல்லாம் ஹீரோவாக நடிக்கும் போது, திருமணமான நடிகைகள் நடிக்க கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகையான கஸ்தூரி அவ்வப்போது சமூகவலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அரசியல், சினிமா மற்றும் தமிழகம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதில் அவர் கூறும் சில கருத்துக்கள் பெரும்பாலும் சர்ச்சைகளிலே போய் முடியும்.

இந்நிலையில், கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார். அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல? என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர் ஒருவர், உங்க கூட நடிச்ச ரஜினியும், கமலும் ஹீரோவா நடிக்கிறாங்க, உங்களால முடியலயே அந்த காரணம்தான்’ என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு கஸ்தூரி, அதுதான் எனது கேள்வியும். தாத்தாக்களை நாம் ஹீரோக்களாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இளம் நடிகைகள் திருமணத்துக்கு பிறகு நிராகரிக்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்