சாலையில் தோசை சுட்டு விற்கும் பிரபல நடிகையின் பரிதாப நிலை: வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com
advertisement

பிரபல மலையாள டிவி சீரியல் நடிகை கவிதா லட்சுமி தனது மகனின் படிப்பு செலவை சமாளிக்க சாலையோரம் தோசை சுட்டு விற்பனை செய்து வருகிறார்.

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை கவிதா லட்சுமி.

advertisement

கவிதா லட்சுமியின் மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார், கல்லூரி கட்டணம் அதிகமாக இருப்பதால் கவிதா பணத்திற்காக திண்டாடிக் கொண்டிருக்கிறார்.

படிப்பு தொகையை கடனாக பெற கவிதா பல வங்கிகளில் முயன்றும், எந்த வங்கியும் அவருக்கு பணம் தரவில்லை.

டிவி தொடர்களில் நடித்து கிடைக்கும் பணத்தை மட்டும் வைத்து மகனின் படிப்பு செலவை சமாளிக்க முடியாததால் அதற்கு வேறு முடிவை எடுத்தார் கவிதா.

அதன்படி, சாலையோரம் தோசைக் கடை நடத்தி வரும் அவர் அதில் கிடைக்கும் வருமானத்தை சேர்த்து வைத்து மகன் படிப்புக்கு அனுப்புகிறார்.

நடிகை கவிதாவின் செயல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் சாலை கடையில் நின்று கொண்டு தோசை சுடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்