பேசவிடாமல் மாணவர்கள் செய்த செயல்: கெஞ்சிய பிக்பாஸ் ஜூலி

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜுலியை பேசவிடாமல் மாணவர்கள் தொடர்ந்து கூச்சலிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜுலி, அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தினால், மக்கள் அவரை வெறுத்து போட்டியிலிருந்து வெளியேற்றினர்.

போட்டியிலிருந்து வெளியேறிய பின்பு, அவர் குறித்து பல்வேறு விடயங்கள் சமூகவலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற ஜுலி அங்கு நடனமாடி முடித்த பின்னர், அங்கு இருந்த மாணவர்களை நோக்கி பேசினார்.

அப்போது மாணவர்கள் ஜுலியை பேசவிடாமல், தொடர்ந்து ஓவியா.. ஓவியா.. என்று கத்தினர், என்னை பேசவிடுங்களேன் என ஜுலி கேட்டுக்கொண்டும் தொடர்ந்து கத்தியுள்ளனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் உடனடியாக ஜுலிக்கு நன்றி சொல்லி மேடையை விட்டு கீழே இறக்கினார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்