இறுதிக் கட்டத்தை நெருங்கிய பிக்பாஸ்! மோதிக் கொண்ட சுஜா- சினேகன்: வெளியேறிய கணேஷ்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

அதாவது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 100 நாட்கள் தங்குபவரே பிக்பாஸ் பட்டத்தை வெல்வர்.

அந்த வகையில் நேற்று 79-வது நாள், நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதால், போட்டிகள் அனைத்தும் கடுமையாக இருக்கும் என்று பிக்பாஸ் தெரிவித்திருந்தார்.

அதற்கு ஏற்றாற் போன்றே போட்டிகள் அனைத்தும் உள்ளது.

இந்நிலையில் நேற்று, போட்டியாளர்கள் அனைவரும் காரில் அமர்ந்து செல்ல வேண்டும் எனவும், இறுதியாக இருப்பவர்களுக்கு 10 பாயிண்ட வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதே போன்று போட்டியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு காரின் உள்ளே சென்றனர். இறுதியாக சுஜா, சினேகன், கணேஷ் ஆகியோர் இருந்தனர்.

இதில் யார் வெளியேறுவது என சுஜா மற்றும் சினேகன் இடையே சண்டை வெடித்தது. அதை பார்த்த கணேஷ் நான் போகிறேன் என வெளியேறினார்.

இதையடுத்து சுஜா மற்றும் சினேகன் ஆகியோர் ஒரு நாள் இரவு, பகல் முழுவதும் காரின் உள்ளே உள்ளனர். இதனால் இந்த இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்று தெரியவரும்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்