இப்படி வைரலாகுமா? ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு படவாய்ப்பு

Report Print Santhan in பொழுதுபோக்கு
374Shares
374Shares
lankasrimarket.com

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் வெளிப்பாடிண்டே புஸ்தகம்.

இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜிமிக்கி கம்மல் என்ற பாடலுக்கு தனியார் கல்லூரி மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து குழுவாக நடனம் ஆடினர்.

அது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷெரில்.

ஆசிரியரான இவர் தனியார் இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், ஓணம் பண்டிகை மற்றும் ஆசிரியர்கள் தினம் இரண்டும் ஒன்றாக சேர்ந்து வந்ததால், மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் ஒரு விரிசல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த நடனம் ஆட முடிவு செய்தோம், 20 ஆசிரியர்கள், 40 மாணவர்கள் பயிற்சி எடுத்தோம்.

ஆனால் இந்த வீடியோ இந்த அளவிற்கு வைரலாகும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த வீடியோவைக் கண்டு பலரும் போன் செய்தாகவும், நிறைய பேர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும், குறிப்பாக தமிழ் நண்பர்களின் மெசேஜ்கள் தன்னுடைய இன்பாக்சில் நிறைந்து கிடப்பதாகவும், அதுமட்டுமின்றி படத்தில் நடிப்பதற்கு கேட்டதாகவும், தற்போதைக்கு அதைப்பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நடிப்பு தனக்கு விருப்பமான ஒன்று தான் இருப்பினும், வீட்டில் அதற்கு ஏற்று கொள்ள வேண்டுமே, தமிழ் சினிமா தனக்கு மிகவும் பிடிக்கும்.

சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தை நிறைய தடவை பார்த்துருக்கேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் தமிழ்ல நடிக்கவும் தயார் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்