ஓவியா தான் என் மருமகள்: ஆரவ்வின் தாய் என்ன சொன்னார்?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். ஓவியா வெளியேறியதால் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா, தான் நடிகர் ஆரவ்வை தீவிரமாக காதலிப்பதாகவும் அவர் இல்லாமல் தனக்கு வாழ்க்கை இல்லை எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, ஆரவ் மேல் ஓவியா வைத்திருக்கும் காதலுக்கு ஆரவ்வின் அம்மா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அவர் தான் எனது மருமகள் என கூறியதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவியது.

இதுபற்றி ஆரவ்வின் அண்ணன் நதீம் கூறுகையில், இது முற்றிலும் தவறான செய்தி, எங்கள் அம்மா இது போல கூறவேயில்லை, அவர் கூறியதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்