அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர்.. பாஜகவில் சேர முடிவு

Report Print Basu in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா, பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னட சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் உபேந்திரா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர், அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தொடர்ந்து அதை மறுத்து வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் அரசியலில் களமிறங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அது தொடர்பாக தனது நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அவர் பா.ஜ.கவில் சேர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பாஜக தலைவர் அமித் ஷா இன்று பெங்களூர் வருகிறார். அவர் பல்வேறு தொழிலதிபர்களையும் பிரபலங்களையும் சந்திக்க இருக்கிறார். அதில் உபேந்திராவும் ஒருவர். இதனால் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்