யாழில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு

Report Print Thamilin Tholan in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

யாழ். சுழிபுரம் ஐக்கிய சங்க சைவவித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை(10) பிற்பகல்-01.30 மணி முதல் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகவும், சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நோபேர்ட் உதயகுமார் சிறப்பு விருந்தினர்களாகவும், வைத்திய கலாநிதி சு.அகிலன், பிரதேச கிராம அலுவலர் சிவரூபன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

குறித்த விழாவில் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் பதக்கம் அணிவித்தும், பாராட்டியும் கெளரவிக்கப்பட்டதுடன், விசேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த விழாவில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. விழாவில் வட மாகாணசபை உறுப்பினருடன், விருந்தினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலதிக செய்தி - சுமி

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்