வவுனியா வளாகம் 2018ஆம் ஆண்டு வன்னிப்பல்கலைக்கழகமாக மாறும்

Report Print Thileepan Thileepan in கல்வி
0Shares
0Shares
lankasri.com

வவுனியா வளாகம் 2018ஆம் ஆண்டு வன்னிப்பல்கலைக்கழகமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கின்றோம் என பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகத்தினால் நேற்றும், இன்றும் நடத்தப்படும் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வில், ஊடகவியலாளர்களால், பாதீட்டில் வவுனியா வளாகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பாக வினா எழுப்பப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

2018ஆம் ஆண்டுக்கான அரசின் பாதீட்டில் எமது வவுனியா வளாக நூலகத்திற்கான நிதியினையும் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதற்காக நாங்கள் கேட்டிருந்த 487 மில்லியன் நிதியில் 2018ஆம் ஆண்டுக்கு 200 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியானது எங்களது அடிப்படை தேவையான நூலகத்தை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை தேவையாக இருக்கும்.

கடந்த ஆவணி மாதம் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இங்கே வருகை தந்த எமது வளாகத்தின் கட்டங்கள் பற்றாக்குறையாக உள்ளதை சுட்டிக்காட்டி எமக்கொரு நிர்வாக கட்டடம் அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக அதனை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்.

அத்தோடு எமது வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதாக அறிவித்திருந்தார். அதன் 2018ஆம் ஆண்டு எமது வளாகமானது வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுவதையும் எமக்கான நிர்வாக கட்டடத்திற்கான நிதியும் அடுத்த வருடம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

பாதீட்டில் வருமானம் குறைந்த, வறுமைக்குட்பட்டவர்களுக்கு சில ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். விசேடமாக தொழில் முயற்சிகள், முயற்சியான்மைகளை தொடங்குவதற்கு இப்பாதீட்டில் முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர கல்விக்காகவும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தொழிநுட்ப பீடங்கள், தொழிநுட்ப கல்விகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எமது வளாகத்திலும் தொழில்நுட்ப பீடத்திற்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை கடந்த வருடம் தொழிநுட்ப கற்கைகளுக்காக 75 மாணவர்களை உள்வாங்கியிருக்கிறோம்.

மேலும் இந்த வருட இறுதிக்குள் தொழிநுட்ப கற்கைகள் பீடத்தை இந்த வருட இறுத்திக்குள் அதற்கான முன்மொழி வைத்து அடுத்த வருடம் அளவில் இத்தொழில் நுட்பபீடத்தை வவுனியா வளாகத்தில் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்