தமிழர்கள் கல்வியில் பின்னோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றனர்

Report Print V.T.Sahadevarajah in கல்வி
0Shares
0Shares
Cineulagam.com

பெற்றோர்களின் கனவுகளை மாணவர்கள் நனவாக்க வேண்டும். இலங்கையின் கல்வியில் நாங்கள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு அதிபர், பிரதி அதிபர்களுக்கான தளபாடங்களை பெற்றுக்கொடுத்து, அவற்றை கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் காலங்களில் எமது சமூகத்தின் தலைவிதியை மாற்றியமைக்க உங்களால் மாத்திரமே முடியும் கல்வியில் எங்களை திட்டமிட்டு புறக்கணித்ததன் காரணமாக தான் எமது இளைஞர்கள் ஆயுதமேந்தினர்.

சுதந்திரத்திற்கு முன்னர் எங்களுடைய தமிழர்களே அனைத்து திணைக்களகங்களிலும் தலைமை பதவியினை வகித்து வந்தனர். இதனை கட்டுப்படுத்தவேண்டும் என்றதன் அடிப்படையில் தான் தமிழ் மக்கள் வாழுகின்ற மாவட்டங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை அதிகரித்தனர்.

இதனால் எமது மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதன் எண்ணிக்கை குறைந்திருந்தது. எமது இளைஞர்கள் அவ்வாறானதோர் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமாத்திரமின்றி இன்று நாங்கள் கல்வியில் நிர்வாக ரீதியாக பின்னடைவு கண்டுள்ளோம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்றைய இனங்கள் கல்வியில் எங்களை முந்தி கொண்டு சென்றுள்ளது. இன்று இலங்கையின் கல்வி நிலையினை எடுத்துப்பார்தால் கிழக்கு மாகாணம் 9ஆவது இடத்தில் இருக்கின்றது.

இதிலும் எமது தமிழ் பிரதேச மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பின்தங்கி காணப்படுகின்றது. இது மிகவும் துரதிஷ்ரவசமான விடயமாகும். இதனை மாணவர்கள் கருத்திலெடுத்து மாற்றியமைக்க வேண்டும்.

இந்த பாடசாலை தேசியமட்டத்தில் பேசப்படுகின்ற ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது. இந்த பெயரை எமது சமூகத்திற்கு ஈட்டி கொடுத்த மாணவர்கள் இதற்காக பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள் அனைரையும் நான் பாராட்டுகின்றேன்.

எதிர்காலத்தில் எமது சமூகத்தினை பாதுகாக்கவேண்டியதன் பொறுப்பு உங்களிடம் மாத்திரமே காணப்படுகின்றது. இதனை நீங்கள் நிறைவேற்றுபவர்களாக மாறவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்