தொடர்ச்சியாக 10 வருடங்கள் ஒரே பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்கள் இன்று முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
ஆசிரியர்களை இடமாற்றுவதற்கான தேசிய கொள்கையின் கீழ் குறித்த ஆசிரியர் இடமாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி சுமார் 12,000 ஆசிரியர்கள் இடமாற்றப்படவுள்ளதுடன், இவர்களுள் உயர்தர வகுப்புக்களுக்கான ஆசிரியர்களாகப் பணியாற்றும் 3,000 ஆசிரியர்கள் நாளை முதல் இடமாற்றப்படவுள்ளனர்.
இவர்களுக்கான இடமாற்றம் தொடர்பான உத்தரவுப் பத்திரங்கள் குறித்த பாடசாலைக்கு வழங்கப்படும் என கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் இந்தக்கொள்கை அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.