பிரான்சில் தமிழ் பேசும் மாணவ- மாணவிகளுக்காக நடைபெற்ற ஆங்கில அறிவுப் போட்டி 2017

Report Print Akaran Akaran in கல்வி
0Shares
0Shares
lankasri.com
advertisement

கடந்த வருடம் போன்று இந்த வருடமும் நடைபெற்ற ஆங்கில அறிவு போட்டியானது பாரிஸ் மாநகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Sruthilaya FineArts School ஆங்கில பாட பிரிவினர், ஐரோப்பாவிலேயே முதன்முறையாக ஆங்கில அறிவிப்போட்டியாகிய Thumbs Up English Challenge இனை இரண்டாவது வருட மாகவும் மிக விமரிசையாக 24/09/2017 அன்று காலை 09:00 மணி அளவில், இரண்டு அமெரிக்க ஆங்கில பேராசிரியர்களான Ms.Catherine Kospitto அவர்கள் முன்நிலையிலும், Ms,Maddy முன்னிலையிலும் நடத்தியுள்ளார்கள்.

advertisement

75 மாணவ/ மாணவிகளை கொண்ட குழுவானது வயது அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே,

Elementary (18 மாதம் - 6 வயது),

Start Of Beginners (7 - 9 வயது),

Beginners (10 - 12 வயது),

Intermediate (13 - 15 வயது)

Upper Intermediate (16 - 21 வயது)

ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது

advertisement

மேலும் பலவகைப் போட்டிகள், அதாவது Rhymes, Recitation, Spell Bee, Punctuation writing , Comprehension Writing, Dictation, Speech, on the spot speech, Show and tell, skit போன்றவை நடைபெற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், பதங்கங்கள், சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.

மேலும் ஆசிரியை தானியா தலைமையில் Thumbs Up English Challenge நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் எங்களுடைய இந்த நிகழ்ச்சி நல்ல முறையில் அமைவதற்கு உறுதுணையாக இருந்த விளம்பரதாரர்களான LANKASRI MARKET, Salle 5p Star உரிமையாளர் பிரின்ஸ் மரியநாயகம், Point Propre உரிமையாளர் சின்னையா தெய்வேந்திரன், Samithiriya Bridal Service உரிமையாளர் ஆஷா ராபின்சன் மற்றும் அணைத்து நண்பர்கள் , நலன்விரும்பிகள் எல்லோருக்கும் சுருதிலயா கலைக்கல்லூரி ஆங்கில பிரிவு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.

ஏற்கனவே இசைத்துறையில் பல திறமைமிக்க மாணவர்களை உருவாக்கிவரும் சுருதிலயா கல்லூரி இப்போது ஆங்கிலக் கல்வியிலும் ஆழ காலூன்றியிருக்கிறது.

ஆசிரியை தான்யா தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றிருக்கின்றது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்