காத்தான்குடி சாவியா மகளிர் பாடசாலைக்கான புதிய கட்டடம் திறந்து வைப்பு

Report Print Reeron Reeron in கல்வி
6Shares
6Shares
lankasrimarket.com

மட்டக்களப்பு - காத்தான்குடி சாவியா மகளிர் பாடசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் நயிமா அப்துஸ்ஸலாம் தலைமையில் இடம்பெற்றள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் 62 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்