மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் பல்லூடக வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை

Report Print Thiru in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

மலையகத்தில் பல்லூடக வகுப்பறை (SMART CLASS ROOM) அமைக்கபட்டுள்ள புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரிக்கு இந்தியாவின் ரோட்டரி கழகத்தின் உயர் அதிகாரிகள் விஜயம் செய்துள்ளனர்.

இந்த விஜயம் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது பல்லூடக வகுப்பறையில் கையாளப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்கள் பார்வையிடப்பட்டுள்ளன.

புதிய கல்வி கொள்கைக்கு அமைய தற்போது இலங்கையிலுள்ள 300 பாடசாலைகளில் பல்லூடக வகுப்பறைகள் (SMART CLASS ROOM) ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு தற்போது அவை நடைமுறைபடுத்தபட்டு வருகின்றன.

இதன் நோக்கம் புதிய தொழில்நுட்பதினை பாவித்து கற்றல், கற்பித்தலை மேற்கொள்வதற்கும் மாணவர்கள் ஒரு விடயத்தை இலகுவாக புரிந்து கொண்டு கல்வி கற்பதற்குமாகும்.

அதன் ஒரு கட்டமாக மலையகத்தில் முதலாவது பல்லூடக வகுப்பறை புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் அமைக்கப்பட்டு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வேலைதிட்டதை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை வந்துள்ள இந்தியாவின் ரோட்டரி கழகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்குமான கலந்துரையாடல் ஒன்று நுவரெலியா கல்வி இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்தே புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரிக்கான விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பயனாக பெருந்தோட்ட பாடசாலைகளில் இந்த பல்லூடக வகுப்பறைகள் அமைப்பதற்கு முதற்கட்ட நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் அமைக்கபட்டுள்ள பல்லூடக வகுப்பறையினை மலையக பெருந்தோட்ட மாணவர்கள் பயள்படுத்தி வரும் அதேவேளை ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்