நீட் தேர்வு விவகாரம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Report Print Basu in கல்வி
0Shares
0Shares
lankasri.com
advertisement

தமிழகத்தில் மாணவி அனிதா தற்கொலையை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் மாநிலம் வலுத்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

advertisement

இந்நிலையில் அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு தடை கோரியும் மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்விற்கு எதிராக போராடுவது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை அமதிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம்,கடையடைப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவோர்களை தகுந்த சட்டங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனினும், அமைதி வழியில் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்று இணையத்தில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்