நாடளாவிய ரீதியில் நடைபெறும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை

Report Print V.T.Sahadevarajah in கல்வி
68Shares
68Shares
lankasrimarket.com

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் நிலையில் மாணவர்கள் உற்சாகமாக பரீட்சையில் பங்கேற்றிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை..

காரைதீவு சண்முகா மகா வித்தியாலய பரீட்சை நிலையத்தில் இன்று காலை மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை நிலையத்தை நாடி சென்றுள்ளனர்.

இதேவேளை பரீட்சையை முன்னிட்டு பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களை தயார்படுத்தியிருந்தனர்.

மலையகம்...

மலையகத்திலும் இன்றையதினம் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக சென்றுள்ளனர்.

தொடர்ந்தும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் மலையகத்தின் ஏனைய பாடசாலை மாணவர்களும் பரீட்சைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பரீட்சை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மலையக செய்திகள் - திருமால்

திருகோணமலை...

திருகோணமலையில் தேசிய பாடசாலைகள் உள்ளிட்ட பல பாடசாலைகளிலும் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக குறித்த பரீட்சை மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்தும் தி/கிண்ணியா/பாலிகா மகாவித்தியாலய மாணவர்களும் இவ்வாறு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தங்களது பெற்றோர்களுடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி மற்றும் மொறவெவ பிரதேசங்களில் கடந்த வருடங்களையும் விட இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு அதிகளவான பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

கிராம புரங்களில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் முஸ்லிம் மாணவர்கள் பள்ளி வாசல்களில் பெற்றோர்களுடன் சென்று சமய வழிபாட்டில் ஈடுபட்டதுடன், இந்து மாணவர்கள் கோயில்களுக்கு சென்று விஷேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்