கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

Report Print Murali Murali in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், மருத்துவ பீடத்தின் சகல மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதனால் மாணவர்களுக்கான விடுதிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

கல்வி பீடத்தின் இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய சகல பீடங்களினதும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகும்.

அவர்களுக்கான தங்கும் விடுதிகள் 22ம் திகதி திறக்கப்படும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் காரணமாக, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்