க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று ஆரம்பம்

Report Print Ajith Ajith in கல்வி
0Shares
0Shares
Cineulagam.com

க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணி இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

இதற்கமைய, முதலாம் கட்ட பரீட்சை விடைத்தாள்களின் திருத்தப் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஒரு கட்டமாக விடைத்தாள் திருத்தும் பணி இடம்பெறவுள்ளன.

இதனால் பரீட்சை விடைத்தாள் திருத்தும் 57 பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணி எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்