பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பம்

Report Print Evlina in கல்வி
0Shares
0Shares
Cineulagam.com

2018ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றது.

கடந்த வருடத்தில் பாடசாலை மாணவர்களுக்கான முன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் 2018ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஆரம்பிக்கப்படுகின்றது.

அத்துடன், கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதன் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 13ஆம் திகதி நிறைவடைவதாகவும், இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி முடிவடையும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, முதலாம் கட்டமாக விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும் 58 பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என தெரியவருகின்றது.

குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் 15ஆம் திகதி முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிக்காக 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டிருக்கும். அவற்றில் முதலாம் தவணை திட்டமிட்டபடி இன்று ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்