கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவன்

Report Print Navoj in கல்வி
268Shares
268Shares
Seylon Bank Promotion

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் நயீம் முஹம்மட் ஸஜீல் 191 புள்ளிகளைப்பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாவது இடத்தினை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையாகும்.

குறித்த பாடசாலையில் இம்முறை தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் 22 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் அதில் ஒரு மாணவன் 191 புள்ளிகளைப்பெற்றிருப்பது பாடசாலைக்கு கிடைத்த வெற்றி என பாடசாலையின் அதிபர் ஏ.சி.எம்.அஜ்மீர் கூறியுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்