புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு! மாவட்ட ரீதியில் சாதனை படைத்த பாடசாலை

Report Print V.T.Sahadevarajah in கல்வி
0Shares
0Shares
Seylon Bank Promotion

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியில் 75 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் அருட்சகோ.சந்தியாகு தெரிவித்துள்ளார்.

ஒரு கல்லூரியில் 75 மாணவர்கள் ஒரே தடவையில் சித்தியெய்தியிருப்பதானது மாவட்ட வரலாற்றில் இதுவே முதல் தடைவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாம் இடம்பெற்றுள்ள இரண்டு மாணவர்களும் இதே பாடசாலையைச் சேர்ந்தவர்களாவர். 186 புள்ளிகளைப் பெற்ற விமலராஜ் ஜெஸ்னு, தவராஜா துர்க்ஸாந்த் ஆகியோரே மாவட்டத்தின் மூன்றாம் நிலையிலுள்ள மாணவர்களாவர்.

இதேவேளை, கடந்த வருடம் கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியில் 68 மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்