நுவரெலியா மாவட்டத்தில் சாதணை படைத்த மாணவி

Report Print Thirumal Thirumal in கல்வி
0Shares
0Shares
lankasri.com
advertisement

2017ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லத்தண்ணி (ஆரம்ப பிரிவு) தமிழ் வித்தியாலய மாணவி நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

குறித்த மாணவி 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திலும் வலயத்திலும் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

advertisement

மறே வலதள தோட்டத்தைச் சேர்ந்த செல்வமணியம், தமயந்தி தம்பதிகளின் மகளான ஒன்ஷ என்ஷலேக்கா என்பவரே இவ்வாறு சித்தியடைந்துள்ளார்.

நலத்தண்ணி (ஆரம்ப பிரிவு) தமிழ் மகா வித்தியாலயத்தில் 35 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் கலந்து கொண்ட நிலையில், 9 பேர் சித்தி அடைந்துள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் வீ. ஜெயபாலன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான அருள்ஞானம் நிதர்ஷன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

மேலும் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஆரம்ப பாடசாலை மாணவன் சிவஞானம் சுரேன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்