மட்டக்களப்பு மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் இருவர் முதலாமிடம், 56 மாணவர்கள் சித்தி

Report Print Rusath in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியின் விபரம் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில் மட்டு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் மாணவி டிலக்சிக்கா வனராஜன் 191 புள்ளிகளையும், ஓட்டமாவடி சரீபலி வித்தியாலயத்தின் நையீம் முகமட் சஜில் என்ற மாணவனும் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையிலிருந்து 56 மாணவிகள் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாக அதிபர் இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்