கல்குடா கல்வி வலயப் பாடசாலைகளின் தொலைநோக்கு அபிவிருத்திக்காக கூடிய ஆசிரியர்கள்

Report Print Reeron Reeron in கல்வி
118Shares
118Shares
Seylon Bank Promotion

கல்குடா கல்வி வலயப் பாடசாலைகளின் தொலைநோக்கு 2025 எனும் கல்வி அபிவிருத்தியை மையமாகக் கொண்ட தொனிப்பொருளின் கீழ் அனைத்து ஆசிரியர்களுக்குமான தெளிவூட்டும் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

அண்மையில் கல்குடா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட தினகரன் ரவியின் தலைமையில் குறித்த கல்வி அபிவிருத்திக்கான தூரநோக்கு அமர்வு நடத்தப்பட்டுள்ளது.

செங்கலடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்த செயலமர்வில் வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், வலய உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செயலமர்வுக்கு வருகைதந்த அனைத்து ஆசிரியர்களின் கருத்துக் கணிப்பு மற்றும் அவர்களின் கருத்தாடல்களின் அடிப்படையில் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்குடா வலயம் முன்னெடுக்கும் இச் செயற்பாட்டுக்கு அனைத்து ஆசிரியர்களும் மிக விருப்பத்துடன் ஒத்துழைத்து வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவிக்கையில்,

கல்குடா கல்வி வலயத்தின் கல்வி வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக சித்தாண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி பின்னடைவே அமைந்துள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் வலயம் உட்பட பலர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அதனால் சித்தாண்டி பிரதேசத்தில் வசிக்கும் கல்விப் புலம்சார்ந்தோர் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கி கல்வி மட்டத்தை அதிகரிக்க முன்வர வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்