இலங்கை நிர்வாக சேவை பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை: பரீட்சைகள் ஆணையாளர்

Report Print Vethu Vethu in கல்வி
103Shares
103Shares
lankasrimarket.com

இலங்கை நிர்வாக சேவை பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகியதாக ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

இலங்கை நிர்வாக சேவை ஆட்சேர்ப்பிற்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை.

எனினும், இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் உள்ளடக்கப்பட்டிருந்த வினாக்கள் இம்முறை பரீட்சையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பரீட்சை வினாத்தாள் வெளியானதாக வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது.

கடந்த 24ம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் பொது அறிவு வினாத்தாளில் ஏற்கனவே நடத்தப்பட்ட பரீட்சைகளின் வினாக்கள் சில உள்ளடக்கப்பட்டிருந்தமை உண்மை, அது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்