தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு தேவையில்லை! கல்வி அமைச்சர்

Report Print Kamel Kamel in கல்வி
0Shares
0Shares
lankasri.com

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு தேவையில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் தற்போது செய்யப்பட்டு வரும் மறுசீரமைப்புக்களின் பின்னர், தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அம்மாக்களுக்கான பரீட்சையாகவே அமைந்துள்ளது, மாணவ மாணவியருக்கு இந்த பரீட்சை தேவையில்லை.

எதிர்காலத்தில் அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்.

எதிர்காலத்திற்கு செல்ல வேண்டிய கடவுச்சீட்டு கல்வியேயாகும்.

எனவே அந்த கடவுச்சீட்டில் இடப்படும் வீசாக்கள் மிகவும் நிதானமான தீர்மானங்களின் அடிப்படையிலான வீசாக்களாக இருக்க வேண்டுமென அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்