வயிற்று உப்புசம்: இந்த புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

வயிற்று உப்புசமானது அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவது, அதிக அமிலம் சுரப்பது, நெஞ்செரிச்சல், அதிக அளவில் காற்றினை விழுங்குதல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு சுரப்பியின் முறையற்ற செயல்பாடு, குடலில் அதிகமாக பாக்டீரியாக்கள் உண்டாவது போன்ற காரணத்தினால் ஏற்படுகிறது.

ஆனால் இப்பிரச்சனை பொதுவாக இருந்தாலும், சில நேரங்களில் அது தீவிரமான நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

வயிற்று உப்பிசம் எந்த நோயின் அறிகுறி?
  • வயிற்று உப்புசம் தொடர்ச்சியாகவும், இடுப்பு எலும்புகளில் வலி மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால், அது கருப்பை புற்றுநோயாக இருக்கலாம்.
  • வயிற்று புற்றுநோய் தீவிரமாகும் போது, உடல் எடை குறையும், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதனுடன் வயிற்று உப்புசம், வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
  • கணைய புற்றுநோயின் பாதிப்பு இருந்தால், உடல் எடை குறைவது, பசியின்மை, வயிற்றின் மேல் பகுதியில் வலி மற்றும் வயிற்று உப்புச போன்ற அறிகுறிகளுடன் மஞ்சள் காமாலை ஏற்படும்.
  • வயிற்று உப்பிசத்துடன் காய்ச்சல், இடுப்பு வலி போன்றவை இருந்தால், அது இடுப்பு எலும்பு பகுதியில் ஏற்படும் நோய் மற்றும் சில நேரங்களில் பாலியல் நோயாகவும் இருக்கலாம்.
  • குடல் புற்றுநோயாக இருந்தால் அது குடலில் அடைப்புகளை ஏற்படுத்தும். அதுவே தீவிரம் அடைந்தால் வயிற்று உப்புசம் பிரச்சனையுடன் மலச்சிக்கல் மற்றும் ரத்தப் போக்கை உண்டாக்கும்.
  • இடுப்பு பகுதி அல்லது அடிவயிற்று பகுதியில் நீர் கோர்வை பிரச்சனையுடன் உடல் பருமன் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவையும் ஏற்படும்.
  • கல்லீரல் புற்றுநோயாக இருந்தால், அதன் அறிகுறியாக வயிற்று உப்புசம் ஏற்படும். இப்பிரச்சனைகள் ஹிபடைடிஸ், அதிகமான மருந்துகளை உட்கொள்ளுதல், மது அதிகம் குடிப்பது போன்ற காரணத்தினால் உண்டாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்