இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் ஸ்டெயின்!

Report Print Kabilan in கிரிக்கெட்
93Shares
93Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம்பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. ஜூலை 12ஆம் திகதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஓர் ஆண்டு ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம்பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 419 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதேபோல், காயத்தால் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய ரபாடாவும், கிளாசன் மற்றும் டி ப்ருயின் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்