CSK அணிக்கு புகழாரம் சூட்டிய ரெய்னா

Report Print Kabilan in கிரிக்கெட்
148Shares
148Shares
lankasrimarket.com

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், சாம்பியன் அணி போன்று விளையாடுவதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்-லில் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு களம் இறங்கிய சென்னை அணி, சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து தொடரிலும் Play Off சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.

மேலும், சென்னை அணி இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.

இந்நிலையில், சென்னை அணியில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் அணி போன்று விளையாடுவதாக புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

சில வீரர்கள் தங்களது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அணியின் வெற்றிக்கான பொறுப்பை கையில் எடுத்துள்ளனர்.

இப்படி இருக்கும்போது, நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் சாம்பியன் அணி போன்று தான் விளையாடுகிறோம், நாங்கள் எங்களுடைய போட்டிகளை பயமின்றி விளையாடுகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்