விக்கெட் கீப்பிங்கில் சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அணித்தலைவரான தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக், விருத்திமான் சஹாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதாவது, மூன்று கேட்சுகள் மற்றும் ஒரு ஸ்டெம்பிங் செய்து நான்கு பேரை ஆட்டமிழக்கச் செய்தார்.

விக்கெட் கீப்பராக நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட் விழ காரணமாக இருந்தது இது இரண்டாவது முறையாகும்.

ஏற்கனவே விருத்திமான் சஹா நிகழ்த்திய இச்சாதனையை தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்