கோஹ்லி-அனுஷ்கா ஜோடி தங்கியுள்ள வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லியும், பிரபல திரைப்பட நடிகையான அனுஷ்கா சர்மாவும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கோஹ்லி சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வானுயர்ந்த அபார்ட்மெண்ட் வாசலில் நின்று எடுத்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்தார்.

இதைக் கண்ட அவரது ரசிகர்கள் கோஹ்லிக்கு சொந்தமாக மும்பையின் ஓர்லி பகுதியில் இருக்கும் 1973 ஓம்கார் அபார்ட்மெண்ட் தான் இது என நினைத்திருந்தனர்.

2016-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட அந்த அபார்ட்மெண்ட் சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது எனவும் ஆனால் கோஹ்லி-அனுஷ்கா தற்போது அந்த அபார்ட்மெண்டில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் அந்த அபார்ட்மெண்டில் புது தம்பதியினர்(கோஹ்லி-அனுஷ்கா) குடிபெயர்வதற்காக அலங்கார வேலைகள் எல்லாம் நடந்துவருகிறது.

அது எல்லாம் முடியும் வரை தற்காலிகமாக சுமார் 24 மாதங்களுக்கு அதே ஓர்லி பகுதியில் இருக்கும் அபார்ட்மெண்ட் ஒன்றில் இந்த ஜோடி தங்கி வருவதாகவும், அதற்கு மாத வாடகையாக 15 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்