தன்னை திருமணம் செய்ய நினைத்த பெண்ணுக்கு கோஹ்லியின் நெகிழ்ச்சி பரிசு

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி தன்னை திருமணம் நினைத்த பெண்ணுக்கு இனிமேல் இது போன்று செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கியதுடன், பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியும், பிரபல நடிகையான அனுஷ்கா சர்மாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டனர்.

கோஹ்லி திருமணம் செய்து கொள்வதற்கு முன், அவரை பல பெண்கள் காதலித்தனர். அதை அவர்கள் மைதானத்தில் எழுத்துப் பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர், சமூகவலைத்தளமான டுவிட்டர் மூலமும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் இங்கிலாந்து வீராங்கனையான டேனி வியாட், கோஹ்லியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

2014-ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தின போது கோஹ்லி ஆட்டத்தில் மெய் மறந்து போன டேனி இந்த விருப்பத்தை கோஹ்லியிடம் தெரிவித்திருந்தார்.

இது குறித்து டேனி தற்போது விளக்கியுள்ளார், நான் அன்று ஒரு டுவிட் செய்தது, இந்திய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.

அதன் பின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக கோஹ்லி இங்கிலாந்து வந்தார். அப்போது அவர் என்னை சந்தித்த் இது போன்று எல்லாம் டுவிட் செய்யக் கூடாது. மக்கள் இதை உண்மை என்று நம்புவார்கள் என்று கூறினார்.

அப்போது நான் அவரிடம் மன்னித்துவிடுங்கள் என்று கூறினேன். நான் அவருடைய மிகப் பெரிய ரசிகை என்பதால், அவருடைய பேட் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

அந்த பேட்டை தான் நான் இந்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து - அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி20 போட்டியில் பயன்படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்