ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை பிடித்த இந்திய அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் கூடுதல் புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

தொடரின் ஆரம்பத்தில் ஒருநாள் போட்டி தரவரிசையில் 121 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் இருந்தது.

ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற போதே 2 புள்ளிகளைப் பெற்று 120 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா 122 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் தென் ஆப்பிரிக்கா 118 புள்ளிகளுடனும், மூன்றாமிடத்தில் இங்கிலாந்து 116 புள்ளிகளுடன் உள்ளன.

இலங்கை 84 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்