இவர்களை ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை? மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே வருத்தம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

கே.எல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சனை மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் எடுக்காதது வருத்தம் தான் என அந்த அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

ஐபிஎல் 2018-க்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் மும்பை அணி பொல்லர்ட், கும்மின்ஸ் போன்ற முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

இது குறித்து பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே, பொல்லார்ட் நியாயமான விலைக்கு வாங்கப்பட்டது திருப்தியளிக்கிறது.

அதே போல ஈவின் லீவிஸ், பெண் கட்டிங், கும்மின்ஸ் அணியில் உள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் சஞ்சு சாம்சன் மற்றும் கே.எல் ராகுலை மும்பை ஏலத்தில் வாங்காதது வருத்தமளிக்கிறது.

திறமையான வீரர்களான அவர்களை ஏலத்தில் வாங்குவது கடினம் என்பதை நான் அறிவேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்