வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடர்: இலங்கை அணியின் முக்கிய வீரர் விலகல்

Report Print Santhan in கிரிக்கெட்
298Shares
298Shares
lankasrimarket.com

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இலங்கை அணி வீரர் குசல் பெரேரா விலகியுள்ளார்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் வரும் 15-ஆம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணிக்கான 15 பேர் கொண்ட பட்டியலில், துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது டி20 தொடரிலிருந்து விலகியுள்ளதாகவும், தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வரும் பெரேரா ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளதால், அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குசல் பெரேராவுக்கு பதிலாக குசால் மெண்டிஸ் 15 பேர் கொண்ட பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்