புதிய உலக சாதனை படைத்த இலங்கை வீரர்: ஜாம்பவான்கள் வாழ்த்து

Report Print Raju Raju in கிரிக்கெட்
834Shares
834Shares
lankasrimarket.com

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இடது கை பந்து வீச்சாளர் என்ற புதிய உலக சாதனையை இலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹெரத் படைத்துள்ளார்.

இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 215 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் இலங்கை இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரங்கா ஹெரத் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

4-வதாக தைஜுல் இஸ்லாம் விக்கெட்டை வீழ்த்திய போது ஹெரத் புதிய சாதனை ஒன்றை படைத்தார்.

அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஹெரத் இதுவரை மொத்தம் 415 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் இடதுகை பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் 414 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில் அதை ஹெரத் முறியடித்துள்ளார்.

இந்நிலையில் ஹெரத்துக்கு குமார் சங்ககாரா, சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்