இந்தியாவில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிடையாது? வெளியான தகவல்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
249Shares
249Shares
lankasrimarket.com

இந்தியாவில் வரி விலக்குகள் சரியாக அமையாத காரணத்தினால், 2021 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஐசிசி வேறு நாடுகளில் நடத்த ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரும் 2021-ஆம் ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது.

அதன் படி மார்ச் மதம் துவங்கி ஏப்ரல் மாதம் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அரசு அறிவித்த வரி விலக்குகள் காரணமாக போட்டி வேறு நாடுகளில் நடத்த ஐசிசி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தின் வரி விலக்குகள் சரியாக அமையவில்லை.

இதற்கு சரியான தீர்வு காண பிசிசிஐ-யும் இந்திய அரசாங்கமும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் இதற்கான தீர்வு எட்டப்படாவிட்டால், தொடர் வேறு நாடுகளில் நடத்தப்படலாம். அதில் இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகள் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனெனில் இந்தியாவின் நேரமும், இலங்கை மற்றும் வங்கதேச அணியின் நேரங்களும் ஒரே மாதிரி இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்படலாம்.

ஆனால் இது குறித்து இன்னும் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் 2019-ஆம் ஆண்டின் இறுதியில் தான் ஐசிசி தொடர் எந்த நாட்டில் நடத்தப்படவுள்ளது என்பது குறித்து உறுதியான முடிவு தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டி20 உலகக்கிண்ணம் தொடருக்கான ஒளிபரப்பு நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி வாங்கியது.

அதற்கு 10 சதவீத வரி விலக்கை அந்த நிறுவனம் இந்திய அரசாங்கத்திற்கு கொடுத்தது, மீதி தொகையை ஐசிசி-வுக்கு கொடுத்தது.

இதனால் ஐசிசி பெரும் நிதி பற்றாக்குறையை சந்தித்தால், இந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்