சென்னை அணிக்கு இவர் வேண்டும் என கூறிய டோனி: உண்மையை உடைத்த உரிமையாளர்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியாவில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான வீரர்களின் ஏலம் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் எடுத்தது குறித்து அணியின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சூதாட்ட பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை அணி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதுமட்டுமின்றி சென்னை அணியில் டோனிக்கு அடுத்தபடியாக, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்த நிலையில், இந்தாண்டில் அஸ்வினை தக்க வைக்கவும் இல்லை, ஏலத்தில் அதிக தொகைக்கு கொடுத்து எடுக்கவும் இல்லை.

சென்னை அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின், இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு விளையாடவுள்ளார்.

இந்நிலையில் சென்னை அணி அஸ்வின் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுத்தது.

அது குறித்து சென்னை அணியின் உரிமையாளர் கூறுகையில், ஹர்பஜன் சிங்கை சென்னை அணியில் எடுக்க டோனி தான் அறிவுறுத்தினார். அதன் காரணமாகவே அவரை ஏலத்தில் எடுத்தோம்.

அஸ்வினின் இடத்தை ஹர்பஜன் சிங் நிச்சயம் பூர்த்தி செய்வார், அதே போல் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங்கின் அனுபவமும், ஆலோசனைகளும் நிச்சயம் உதவும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்