110 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்: முன்னிலை பெற்ற இலங்கை

Report Print Kabilan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

டாக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 110 ஓட்டங்களுக்கு வங்கதேச அணி ஆல்அவுட் ஆகியுள்ளது.

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டாக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கி 222 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

குசால் மெண்டிஸ் 68 ஓட்டங்களும், ரோஷன் சில்வா 56 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் அப்துர் ரசாக், இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

லித்தோன் தாஸ் 24 ஓட்டங்களுடனும், ஹசன் மிராஸ் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டத்தினை தொடர்ந்த வங்கதேச அணியில், தாஸ் 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர், மிராஸ் மற்றும் மொக்மதுல்லா இணை ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடியது. இதன் மூலம் வங்கதேசம் 100 ஓட்டங்களை கடந்தது.

அணியின் ஸ்கோர் 107 ஆக இருந்தபோது, மொக்மதுல்லா 17 ஓட்டங்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த ரஹ்மான், அப்துர் ரசாக், இஸ்லாம், முஸ்டாபிஜூர் ரஹ்மான் ஆகியோரும் சொற்ப ஓட்டங்களுக்கு அவுட் ஆகினர்.

இறுதியில் வங்கதேசம் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் ஹசன் 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் லக்மல், தனஞ்ஜெயா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பெரேரா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 62 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

அதிகபட்சமாக கருணரத்னே 32 ஓட்டங்களும், சண்டிமல் 30 ஓட்டங்களும், தனஞ்ஜெயா டி சில்வா 28 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம், வங்கதேசத்தை விட இலங்கை அணி 312 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரோஷன் சில்வா 58 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்