தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி வீரர் ரவீச்சந்தர் அஸ்வின் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை நடந்த முதற் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இருக்கும் நிலையில், செஞ்சூரியனில் வலைபயிற்சியின் போது அஸ்வின் செய்ததை BCCI தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவாக வெளியிட்டது.
வழக்கமாக சுழல் பந்துவீச்சாளரான அஸ்வின் ஆஃப் ஸ்பின் மற்றும் கேரம் பால் வீசுவார், தற்போது லெக் ஸ்பின் பௌலிங்கையும் பயிற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் வலைப்பயிற்சியில் சீம் பௌலிங் எனப்படும் வேக பந்து வீச்சாளர்கள் வீசுவது போன்று பயற்சி செய்து கவனம் செலுத்தி வருவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Just for fun - when @ashwinravi99 decided to bowl seam instead of spin #SAvIND pic.twitter.com/7bsCpndNkk
— BCCI (@BCCI) 11 January 2018