ஜூனியர் உலக கிண்ண போட்டிகள் நாளை தொடக்கம்: சாதிக்குமா இலங்கை?

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நாளை தொடங்கவுள்ளது.

ஐ.சி.சி சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 12-வது ஜூனியர் உலக கிண்ண கிரிக்கெட் திருவிழா நியூசிலாந்தில் நாளை தொடங்கி பிப்ரவரி 3-ம் திகதி வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ‘ஏ’ பிரிவில் கென்யா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் ‘பி’ பிரிவில் இந்தியா, அவுஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே அணிகள் இடம் பெற்றுள்ளன

‘சி’ பிரிவில் வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, நமிபியா, ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

முதல் நாளில் 4 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா- ஜிம்பாப்வே, வங்கதேசம்-நமிபியா, நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதில் மோதுகின்றன.

சர்வதேச அணியில் இடம்பெற இந்த தொடரானது இளம் வீரர்களுக்கு பொன்னான வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்