தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி வீரர்கள், நூதன முறையில் பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் வரும் 13ஆம் திகதி, செஞ்சூரியனில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டிக்காக, புதிய முறையில் பயிற்சி ஒன்றை மேற்கொண்டனர்.
அதாவது, ஒரு வட்டப்பாதையில் நின்று கொண்ட வீரர்கள், ஒவ்வொருவரும் சிகப்பு, மஞ்சள் நிற துண்டுகளை தங்களது அரைக்கால் சட்டையில் செருகி வைத்துக் கொண்டனர்.
பின்னர், விசில் ஒலித்ததும் ஓடத் தொடங்கிய அனைவரும், மற்றவரின் துண்டை கைப்பற்ற வேண்டும். இதுவே நூதன பயிற்சியாகும். இந்த வீடியோ தற்போது, ட்விட்டர் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
#WATCH Indian cricket team's warm-up session in South Africa's Centurion pic.twitter.com/VmFUoRQdqJ
— ANI (@ANI) 11 January 2018