மீண்டும் விஸ்வரூபம் எடுத்த யுவராஜ், கம்பீர்: ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா?

Report Print Harishan in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக ஒரு காலத்தில் கலக்கி வந்தவர்கள் யுவராஜ் மற்றும் கம்பீர்.

இருவரின் ஆட்டமும் தற்போது சோர்வாகியுள்ள நிலையில், இந்திய அணி மட்டுமல்லாது ஐபிஎல் போட்டியும் இவர்களை கைவிட்டுவிட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வந்த நிலையில் ஒரு ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற சையத் முஸ்தபா அலி கோப்பையின் டி-20 போட்டியில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய யுவராஜ், 4 பவுண்டரி 1 சிக்சர் என 40 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்து துவைத்துள்ளார்.

அவருக்குப் பின் டெல்லி அணிக்காக களமிறங்கிய கம்பீர் சற்று கூடுதலாக 2 சிக்சர் 6 பவுண்டரிகள் அடித்து அசத்தியுள்ளார்.

இதனை ஐபிஎல் அணி உரிமையாளர்கள் அனைவரும் கவனித்து வரும் நிலையில் இவர்களை மீண்டும் விலைக்கு வாங்க உரிமையாளர்கள் முனைப்பு காட்டலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மேலும் கடந்த 2014 ஐபிஎல் போட்டியில் யுவராஜை 14 கோடி கொடுத்து பெங்களூரு அணி வாங்கியிருந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக 16 கோடி வாங்கப்பட்டிருந்தார்.

ஆனால் இந்தாண்டு யுவராஜ் மற்றும் கம்பீரின் பெயர்கள் ஐபிஎல் ரிட்டென்ஷனில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்