கோஹ்லிக்காக இங்கிலாந்தில் இருந்து வந்த தம்பதியினர்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

விராட் கோஹ்லியின் ஆட்டத்தை பார்ப்பதற்கு இங்கிலாந்தில் இருந்து தம்பதியினர் வந்துள்ளனர்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த 5-ந்திகதி கேப் டவுனில் தொடங்கியது.

முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியை பார்ப்பதற்காக இந்திய அணித்தலைவர் கோஹ்லியின் தீவிர ரசிகர்கள் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், நாங்கள் விராட் கோஹ்லியின் ஆட்டத்தைக் காண விரும்பினோம், உண்மையிலேயே அவர் உலகின் தலைசிறந்த வீரர் என்று கூறியுள்ளனர்.

மேலும், நானும் எனது மனைவியுமான கிறிஸ்ஸாவும் இந்த நகரத்தை மிகவும் நேசிக்கிறோம், ஏனென்றால் இது அமைதியானதாகவும், மிகவும் அழகான இயற்கைகளையும் கொண்டது என வர்ணித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்