தென் ஆப்பிரிக்கா கேப்டனை மிரள வைத்த பும்ரா: முனங்கியபடி வெளியேறிய டூபிளசிஸ்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

தென் ஆப்பிரிக்கா வீரர் டூபிளசியை தன்னுடைய அசுர வேகத்தில் வீழ்த்திய பும்ராவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேப்டவுனில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சொந்த மண்ணில் வெற்றி நடை போட்டு வந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா மண்ணில் 208 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற முடியாமல் பரிதவித்து வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்களை போன்று வேகத்தில் மிரட்டினர்.

அந்த வகையில் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டூபிளசிஸ், பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொண்டார்.

ஆனால் பந்தானது அசுரவேகத்தில் வந்ததால், அவர் பந்தை கணிப்பதற்குள், பந்தானது அவரது கை உறையில் பட்டு கீப்பரிடம் சென்றது.

இதனால் டக் அவுட்டான டூபிளசிஸ் பவுலியன் திரும்பும் போது கோபத்துடன் முனங்கியபடியே சென்றார், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்