டோனிக்கு சவால் விட்ட சகா: மின்னல் வேகத்தில் கேட்ச் பிடித்து அசத்தல்

Report Print Santhan in கிரிக்கெட்
558Shares
558Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா மின்னல் வேகத்தில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 536 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 356 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் போது, இலங்கை வீரர் சமரவீரா, இஷாந்த் சர்மா பந்தை அடிக்க முயன்ற போது பந்தானது பேட்டில் பட்டு, விக்கெட் கீப்பர் சகாவிற்கும் முதல் ஸ்லிப்பிற்கும் இடையில் சென்றது.

வீடியோவை காண...

ஏற்கனவே இந்திய ஸ்லிப் பீல்டர்கள் பல கேட்சுகளை தவறவிட்டதால் சகா சூப்பர் மேனாக மாறி சிறப்பாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

பந்தை கேட்ச் பிடிக்க சகா காட்டிய வேகம், முன்னாள் தலைவர் டோனிக்கு சரியான மாற்று வீரர் என்பதை நினைவு படுத்தும் விதத்தில் அமைந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்